அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Wednesday, December 9, 2009

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் !!!


வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. பதினோரு வயது தான். தலைவனை இழந்த குடும்பத்தை தாங்கும் வயதா அது? இப்படி ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்துவதே எவ்வளவு பெரிய சாதனை? ஆம் நாம் எல்லாம் அதிகம் கேட்ட பெயர் , இசை உலகின் ஒரு நட்சத்திரம் தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் 1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் ஏ.எஸ்.திலிப்குமார்.இவரது தந்தை ஏ.கே சேகர் கெரளத்தே சினிமா என்ற மலையாளபடத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். தனது 9 வயதிலேயே தந்தையை இழந்தவர் தனது குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை மேற்கொண்டார்...



சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு, திலீப்புக்குத் துணையாக வாய்த்தது வறுமைதான். உழைத்தால்தான் அடுத்தவேளை உணவு என்ற சூழலில் அவருக்குக் கைகொடுத்தது சிறுவயதில் தந்தையிடமிருந்து கற்க ஆரம்பித்த இசை. திலீப்பை வளர்த்தது. ஆதரவளித்தது. ஆளாக்கியது. ஏ.ஆர். ரஹ்மானாக அடையாளமும் பெற்றுத் தந்தது.

தந்தை இறந்த பிறகு, ஸ்டூடியோ ஸ்டூடியோவாக வேலைக்கு சென்றதால், திலீப்பால் பள்ளிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை. பள்ளி நிர்வாகம், அவரின் அம்மாவிடம் பையன் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கவனிக்க சொன்னார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கும் செல்லவேண்டும். பிறகு, பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது? அடுத்த நாள், ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வர சொன்னார் அவரின் அம்மா. அங்கு வாசலில் காத்திருந்த அவர், திலீப்பிற்கு அங்கேயே உடை மாற்றி, உணவளித்து பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தார்.







ரஹ்மானுக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு நேரத்தில், எதிர்காலத்தின் மீது பயமேற்பட்டு, இசைத்துறையில் வேலையில்லாமல் போனால் என்ன செய்வது என்று ஒரு கட்டத்தில் திகைத்து போய், கார் ஓட்ட கற்றுக்கொண்டாராம். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்!

1975 இல் வெளிவந்த ‘பென்படா’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘வெள்ளித்தேன் கிண்ணம் போல்’ என்ற பாடல். இந்த படத்திற்கு இசை, அவரின் தந்தை ஆர்.கே.சேகர். பாடல் ரெகார்டிங்கின் போது, ஒன்பது வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் ஏதோ வாசித்துக்காட்ட, அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்துவிட, அந்த மெட்டே பாடலாகியது. அப்புறம், இன்னொரு விஷயம். ரஹ்மான் தந்தை இசையமைத்த முதல் படத்தின் பெயர் - பழசிராஜா.






தனது தந்தையிடம் இருந்து கிபோர்டு வாசிக்கும் கலையை கற்ற இவர் தனது பால்யபருவ நன்பர்களான சுவாமி, ஜோஜோ மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து நெமோசிஸ் என்ற இசைக்குழுவை ஆரம்பித்து அந்த குழுவில் பியானோ, கித்தார், மற்றும் கீபோர்டு வாசித்துவந்தார். பல இசை அமைப்பாளர்களை உருவாக்கிய தனராஜ் மாஸ்டரிடம் இவர் இசையை பற்றி மேலும் பல நுணுக்கங்களை கற்றுகொண்டார். தனது 11 வயதிலேயே ராகதேவன் இளையராஜாவின் குழுவில் இணைந்து கீ போர்ட் பிளேயராக பணியாற்றினார்..

ஒரு நிறுவனத்தில் பணிபுறிந்த அவர் விளம்பர படங்களின் இசை அமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடிவந்தது. விளம்பர படம் என்று சலிக்காமல் தனது திறமையை வெளிகொண்டுவந்து பல விளம்பரதாரர்களின் நிறந்தர இசையமைப்பாளர் ஆனார்.




எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார்... இவரது திறமையைகண்டு தனது ரோஜா என்ற படத்திற்கு இசை அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த படம் வெளியானதும் முழு இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் இந்தி மலையாளம் தெலுங்கு என இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியானது.

தனது முதல்படத்திலேயே சிறந்த இசைஅமைப்பளாருக்கான தேசிய விருது வென்றவருக்கு அதன் பிறகு விருதுகளின் மழை பெழிய ஆரம்பித்துவிட்டது. 1992-ல் வெளியான இந்த படத்தை தொடந்து வந்த சங்கரின் ஜெண்டில்மேன் (1993) படமும் தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பளர் விருதை தேடித்தந்தது. அதனை அடுத்து காதலன் (1994), பாம்பே(1995),இந்தியன்(1996), மின்சாரகனவு (1997),ஜீன்ஸ்(1998), சங்கமம்(1999),கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(2000),முதல்வர் (2001),கண்ணத்தில் முத்தமிட்டால்(2002),கண்களால் கைதுசெய்(2003),ஆயுத எழுத்து(2004).அன்பே ஆருயிரே(2005), சில்லுனு ஒருகாதல் (2006),சிவாஜி (த பாஸ்) (2007), என தமிழில் தனது விருதுகளை வாங்கி குவிக்க ஹிந்தியிலும் இவரின் இசையில் வெளிவந்த படங்கள் விருதுகளை வாங்கி குவித்தன.


ரோஜாவின் முலம் இந்தியில் அறிமுகமானாலும் 1995-ல் வெளிவந்த ரங்கீலா படத்தின் மூலம் இந்தி திரைஉலகின் பாட்ஷாவானார், அதன் பிறகு வெளிவந்த அனைத்துபடங்களும் அவார்டை வாங்கி கொடுத்தது. திலி சே, தால், புகார், லாகான்(ஆஸ்கார்டுக்கு அணுப்பபட்டது) த லீசன்ட் ஆப் பகத்சிங், ஸ்வதேஷ்,ரங்தே பசந்தி, குரு, ஜோதா அக்பர்,கஜனி(ஹிந்தி) என இந்தியில் இவரது இசையில் வெளிவந்த அனைத்து படங்களும் விருதுகளை வாங்கிதந்தது.இசைதான் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி இசை. ரஹ்மானின் அடிப்படை ஃபார்முலா இதுவே. தனக்குக் கிடைத்த விளம்பரப் பட வாய்ப்புகளில் அதைத்தான் செய்தார். ரோஜாவில் திரை திறந்தது. அதன் பின் அசுர வளர்ச்சி. இளவயதிலேயே இமாலய சாதனைகள். இசைக்கு ரஹ்மான் என்றால் படத்தின் பாதி வெற்றி உறுதி. படம் வியாபாரமாகிவிடும். ஆக, இன்று பெரிய இயக்குநர்கள் எல்லாம் ரஹ்மானுக்காகக் காத்திருந்து படம் எடுக்கிறார்கள். குண்டுச் சட்டிக்குள்ளேயே ஓடாமல், பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லைகள் தாண்டி இயங்கி, உலகின் செவிகளை தன் வசப்படுத்த ரஹ்மான் செய்த முயற்சிகள் பிரமிப்பானவை.


இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரையும் டிஜிட்டல் இசை நோக்கி செல்ல வைத்தான். உலக இசையை இந்தியா கொண்டு வந்தான். இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சென்றான். தமிழகமும் இந்தியாவும் வருட வருடம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கரை, இதோ கை நிறைய வாங்கி கொண்டு வந்தார்….


2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்

No comments:

Post a Comment