அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Wednesday, August 26, 2009

தெரிந்து கொள்ளுங்கள் !!!

உப்பு தண்ணீர் அதிகம் உள்ள கடல் செங்கடல். உப்பு குறைவாக உள்ள கடல் துருவப் பகுதி கடல்.
கருங்கடல் ஐரோப்பாவில் உள்ளது.
மேகங்கள் பத்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலக அன்னையர் தினம் மே 10ம் தேதி கொண்டாப்படுகிறது.
உலக செஞ்சிலுவை சங்க தினம் மே 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.
பார்லி பூ மூன்று நிமிடங்கள் மட்டுமே பூத்திருந்து உடனே வாடி விடும்.
தேர்தலில் முதன் முதலாக சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி
பெற்றவர் முத்துலட்சுமி ரெட்டி.
விலாங்கு மீன் நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது.

நல்ல பயனுள்ள தகவல்கள்

ருமேனியா நாட்டின் தேசிய மலர் பூவரசம் பூ.

டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை வானம்பாடி.

ராஜஸ்தான் மாநிலத்தில் கழுதைப் பந்தயம் நடத்தப்படுகிறது.

குதிக்கத் தெரியாத மிருகம் யானை.

உலகில் முதன் முதலில் காற்றாடி இயந்திரம் உருவாக்கி உபயோகப்படுத்தப்பட்டது ஐரோப்பாவில் தான்.

கைக் கடிகாரத்தை முதன் முதலில் உபயோகித்தவர் ராணி எலிசபெத்.

இந்தியாவில் எழுதப் பட்ட முதல் ஆங்கில நாவல் ராஜ்மோகனின் மனைவி என்ற நாவல் தான். இதை 1870ம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதினார்.

இந்தியாவின் முதல் அரசுத் தரப்பு வக்கில் எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பவர் தான். இவர் 1887ல் மெட்ராஸ் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.

உலகில் முதன்முதலில் தேர்வு முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.

ஸ்டாலின் சீனிவாசன் என்பவரால் 1930ம் ஆண்டு மணிக்கொடி என்ற தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

மூட்டைப் பூச்சியில் 20000 வகைகள் உண்டு. இவற்றில் சில தாவரச் சத்தையும், சில ரத்தத்தையும் உறிஞ்சி வாழும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது.

லெமுரியாக் கண்டம் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்து கடலில்
மறைந்து போன நிலப்பரப்பு. லெமு என்பது தேவாங்கைக் குறிக்கும். அங்கு தேவாங்குகள் அதிகம் இருந்தமையால் அந்நிலப்பரப்புக்கு இப்பெயர் இடப்பட்டது.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஓரே வீரர் தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ்.

டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்-ரிக் விக்கெட் எடுத்த வீரர் இந்தியாவின் இர்ஃபான் பதான்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நாடு இந்தியா.

அணுசக்தியின் மூலம் ஓடும் முதல் கப்பலை அமெரிக்காதான் தயாரித்தது.

உலகில் முதன்முதலில் மின்சார ரயில் ஜெர்மனியில் 1881ம் ஆண்டு இயக்கப்பட்டது.

நடமாடும் தபால் நிலையங்களை முதலில் அறிமுகம் செய்து வைத்த நாடு பிரிட்டன்.

அமேசான் ஆறு

அமேசான் ஆறு தென் அமெரிக்ககண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சேஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம்.

இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

அமேசான் ஆறு அட்லாண்டிக் பெருங்கடலில்கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

Thursday, August 20, 2009

நட்பு

உன் காதலை விட
நட்புக்கு மரியாதை செலுத்து
இந்த நட்பு உன்னோடு இருக்கும்...
காதல் உன்னை விட்டு போக
விரும்பும்....
ஏமாந்துவிடாதே!!!!!!!!