அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Tuesday, October 20, 2009

கல்பனா சாவ்லா நம்பிக்கை !!!


"இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே".

இந்தியாவைச் சேர்ந்த ஹரியானாவில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழிலதிபருமான திரு.ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து அவருக்கு பறப்பதில் ஆர்வம் ஏற்பட்டது .

கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார் கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் துவங்கினார்.


கல்பனாவின் விண்வெளிக் கனவை அங்கீகரிக்க, பாராட்ட அவள் தோழிகளோ! குடும்பமோ முன்வரவில்லை. மாறாக கேலியும் கிண்டலும் தான் பரிசாக்க் கிடைத்தது. காரணம், அப்பொழுது 1970களில் நம் நாட்டில் இருந்த அறிவியல் வளர்ச்சி மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நிலையில் இல்லை. ஏன் இன்னும் அது கனவாகவே உள்ளது. அப்படி எந்த ஒரு வாய்ப்பும் கண்ணுக்கு தெரியாத சூழ்நிலையிலும்…. தன்னால் விண்வெளிக்கு செல்ல முடியும் என்று உறுதியா, திடமாக நம்பினார் கல்பனா…


கல்பனாவின் திட்டவட்டமான குறிக்கோளுடன் அவரது உறுதியான நம்பிக்கையும் சேர்ந்து, ஏற்படுத்திய அதிர்வலையை உடனே ஏற்றுக் கொண்ட அவள் ஆழ் மனம் அதற்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தந்தது.


நம்பிக்கை மட்டுமல்ல. நினைத்ததை அடைவதற்கு அதறகு ஈடான விலையை தந்தாக வேண்டும் என்பதை தெரிந்திருந்தார் கல்பனா. ஆம். அவர் தந்த விலை. அதற்கான தொழில் நுட்ப அறிவினை பெறுவதற்கான அவரது அயராத உழைப்பு.அது வெறும் கனவாக மட்டுமல்ல. அவள் பேச்சில், மூச்சில், எண்ணத்தில், எல்லாமுமாக நிறைந்திருந்தது.


அவர் 1982 ஆம் ஆண்டு, வானூர்தி பொறியியலில் சந்திகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார்.

அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டம் 1984 ஆம் ஆண்டு பெற்றதோடு பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைகழகத்தில் 1986 ல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன் விண்வெளி பொறியியலில் 1988 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


NASA- வில் “கல்பனா"



அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ஒருவர். “கல்பனா! NASA- வில் அமெரிக்கர்களை மட்டும்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். உன்னைப் போன்ற வெளிநாட்டுக்காரர்களை அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார். அதற்கு “இல்லையில்லை! எனக்கு திறமை இருக்கிறது. போதுமான தகுதியும் இருக்கிறது. அதனால் நாசாவில் நான் இடம் பிடிப்பேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் கல்பனா.


ஆனால் அந்த முயற்சியில் முதல் முறை அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் விடாமுயறசியோடு தன் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டு அடுத்த முறைவெற்றி பெற்றார்.

தோல்வியைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் வெற்றி நிச்சயம் என்ற வெற்றி சித்தாந்தத்தை நிரூபித்தார்

கல்பனா மார்ச் 1995 ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1998 ல் அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பெர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார்.

1984 ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியை சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இனக்ல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா வ்/ஸ்த்தோல் ல்[2] க்ஃப்ட் ஆராய்ச்சி செய்தார்.

விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச்ச்சன்ற்தழ் பெற்ற தோடு அவர், ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் க்ளைடர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107ல் பயணிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப் பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

ஜனவரி 16, 2003 ல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் (STS-107 ல்){/1 விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் (SPACEHAB/BALLE-BALLE/FREESTAR ) மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன.இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிளைப்பற்றியும் அவரது பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.

2003 கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்புகையில் புவி வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்பு : March 17, 1962
இறப்பு : February 1, 2003 (aged 40)