அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Wednesday, August 26, 2009

நல்ல பயனுள்ள தகவல்கள்

ருமேனியா நாட்டின் தேசிய மலர் பூவரசம் பூ.

டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை வானம்பாடி.

ராஜஸ்தான் மாநிலத்தில் கழுதைப் பந்தயம் நடத்தப்படுகிறது.

குதிக்கத் தெரியாத மிருகம் யானை.

உலகில் முதன் முதலில் காற்றாடி இயந்திரம் உருவாக்கி உபயோகப்படுத்தப்பட்டது ஐரோப்பாவில் தான்.

கைக் கடிகாரத்தை முதன் முதலில் உபயோகித்தவர் ராணி எலிசபெத்.

இந்தியாவில் எழுதப் பட்ட முதல் ஆங்கில நாவல் ராஜ்மோகனின் மனைவி என்ற நாவல் தான். இதை 1870ம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதினார்.

இந்தியாவின் முதல் அரசுத் தரப்பு வக்கில் எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பவர் தான். இவர் 1887ல் மெட்ராஸ் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.

உலகில் முதன்முதலில் தேர்வு முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.

ஸ்டாலின் சீனிவாசன் என்பவரால் 1930ம் ஆண்டு மணிக்கொடி என்ற தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

மூட்டைப் பூச்சியில் 20000 வகைகள் உண்டு. இவற்றில் சில தாவரச் சத்தையும், சில ரத்தத்தையும் உறிஞ்சி வாழும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது.

லெமுரியாக் கண்டம் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்து கடலில்
மறைந்து போன நிலப்பரப்பு. லெமு என்பது தேவாங்கைக் குறிக்கும். அங்கு தேவாங்குகள் அதிகம் இருந்தமையால் அந்நிலப்பரப்புக்கு இப்பெயர் இடப்பட்டது.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஓரே வீரர் தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ்.

டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்-ரிக் விக்கெட் எடுத்த வீரர் இந்தியாவின் இர்ஃபான் பதான்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நாடு இந்தியா.

அணுசக்தியின் மூலம் ஓடும் முதல் கப்பலை அமெரிக்காதான் தயாரித்தது.

உலகில் முதன்முதலில் மின்சார ரயில் ஜெர்மனியில் 1881ம் ஆண்டு இயக்கப்பட்டது.

நடமாடும் தபால் நிலையங்களை முதலில் அறிமுகம் செய்து வைத்த நாடு பிரிட்டன்.

No comments:

Post a Comment