அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Wednesday, August 26, 2009

அமேசான் ஆறு

அமேசான் ஆறு தென் அமெரிக்ககண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சேஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம்.

இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

அமேசான் ஆறு அட்லாண்டிக் பெருங்கடலில்கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

No comments:

Post a Comment